மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெள்ளத்தில் சிக்கித்தவித்த நாய்களை படகு கொண்டு மீட்ட அதிகாரிகள்: மனிதத்தை உணர்த்தி வைரலாகும் வீடியோ உள்ளே..!
மிக்ஜாம் புயலின் காரணமாக தலைநகர் சென்னை வெள்ளத்தின் பிடியில் சிக்கி முடிச்சூர் மற்றும் வேளச்சேரி பகுதிகள் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை பகுதியில் ஏரியும் உடைந்தது.
நேற்று முதல் மழை படிப்படியாக குறைந்ததால் மீட்பு பணிகள் துரித முறையில் நடைபெற்று வருகின்றன. போர்க்கால அடிப்படையில் மழை நீர் வெளியேற்றப்பட்டு மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தெருநாய்களை மீட்பு படையினர் படகின் உதவியுடன் பத்திரமாக மீட்டு அழைத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்பதை உணர்த்தும் பொருட்டு இந்த வீடியோவை பலரும் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.