96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை.. குலுக்கல் முறையில் தேர்வு..!
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்கள் இன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. https://rte.tnschools.gov.in/home?returnUrl=%2Freg-parent என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் மே 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் எட்டாயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்கள் இன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். கட்டாய கல்வி உரிமை திட்டத்தில் 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்த நிலையில், சுமார் ஒரு லட்சம் இடங்களுக்கு குலுக்கல் முறையில் மாணவர்கள் இன்று தேர்வு செய்யப்படுகின்றனர்.