53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
உடல் அழுகிய நிலையில் சுஜித் சடலமாக மீட்பு: 80 மணிநேர மீட்பு பணி தோல்வியில் முடிந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 . 45 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த சிறுவன் சுஜித் இறந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 80 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றுவந்த மீட்பு பணிகள் தோல்வி அடைந்துள்ளது.
இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதா கிருஷ்ணன் கூறுகையில்: நேற்று இரவு 10.30 மணிக்கே ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்ததாகவும், இதனால் பேரிடர் மீட்பு குழுவின் வழிகாட்டுதல் படி இடுக்கி போன்ற அமைப்புடன் குழந்தை சுஜித் உடல் அழுகிய நிலையில் மேல தூக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தை எப்போது இறந்தது என்பது தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.