மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை: ஆர்.எஸ்.எஸ்., வி.சி.க பேரணிகளுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு.!
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்தியா முழுவதும் 19 மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்கள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதில், சட்டவிரோத செயல்பாடுகள், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட பலரும் கைது செய்யபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் கேரளாவில் முழு அடைப்புக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு உட்பட அவர்கள் ஆதரவு அமைப்பு அழைப்பு விடுத்த நிலையில், அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் பெட்ரோல் குண்டுகளை வீசி வன்முறை முறையில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை, மதுரை, சிதம்பரம் உட்பட பல்வேறு இடங்களில் பாஜகவினருக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அக். 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் கட்சியின் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே நாளில் வி.சி.க சார்பில் சென்னையில் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இயல்பு சூழ்நிலை இருந்ததால் காவல் துறையினரும் இரண்டு அமைப்பினருக்கும் அனுமதி வழங்கி இருந்தனர். இந்த நிலையில், தற்போது ஆங்காங்கே பாஜகவினருக்கு எதிரான தாக்குதல் நடைபெற்று வருவதால், சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைப்போல, வி.சி.க அழைப்பு விடுத்த போராட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.