மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடத்த தனியார் பள்ளிக்கு விடுமுறை; சம்மன் வழங்கிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்..!
நீலகிரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் அங்குள்ள தனியார் பள்ளியில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து, தனியார் பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு ஒருவார காலம் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் பள்ளிக்கு சம்மன் வழங்கியுள்ள கல்வி அலுவலர், விடுமுறை வழங்கியது குறித்து விளக்கம் அளிக்காத பட்சத்தில், துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.