மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாம் ஸ்கூல், காலேஜ் பசங்க.. தனிவீட்டில் 3 ஆண்களுடன் பெண் செய்த காரியம்., கதறிய கணவன்..! பதறவைக்கும் சம்பவம்..!
3 மாவட்டங்களில் தனித்தனியே வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்த தம்பதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களுடன் கஞ்சா விற்பனைக்கு உதவியாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, காளிங்கராயன்பாளையம் கால்நடை மருத்துவமனை அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சித்தோடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வீட்டில் அதிரடியாக நுழைந்துள்ளார். அப்போது, வீட்டில் பெண் உட்பட 4 பேர் இருந்த நிலையில், பெண் அதிகாரிகளை கண்டு தெறித்தோடினார்.
இதனையடுத்து, வீட்டிற்குள் சோதனை செய்தபோது 300 கிராம் எடை கொண்ட 42 கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டன. காவல் துறையினர் நாமக்கல்லை சேர்ந்த சரவணன் (வயது 24), மெய்யப்பன் (வயது 24), அஜித் (வயது 24) ஆகிய 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், தப்பி சென்றது பவானி புதிய பேருந்து நியாயத்தை சார்ந்த விஜய்யன் என்பவரின் மனைவி பவித்ரா என்ற மகேஸ்வரி (வயது 24) என்பது அம்பலமானது.
இதனையடுத்து, பவித்ராவை கைது செய்வதற்காக காவல் துறையினர் அவரின் வீட்டிற்கு சென்றபோது, பவித்ராவின் கணவர் விஜயன் அதிகாரிகளை ஆபாசமாக பேசி கொலை செய்திடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதிகாரிகள் விஜயன் மற்றும் அவரின் மனைவி பவித்ராவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள வெவ்வேறு பகுதியில் வீடு எடுத்து பள்ளி மாணவர்கள் மூலமாக பவித்ரா - விஜயன் தம்பதி கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளளது. இவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வீட்டிற்கு சென்று கஞ்சா பொட்டலங்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதில், பவித்ராவின் மீது கொலை வழக்கு உள்ள நிலையில், விஜயனின் மீது 19 வழக்குகள் உள்ளனர். இதனையடுத்து, இவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.