மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தறிகெட்டு இயங்கிய அரசு பேருந்து, சாலைத்தடுப்பில் மோதி விபத்து.. 19 பயணிகள் காயம்.!
சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து விருத்தாச்சலம் அருகே விபத்திற்குள்ளானதில் 19 பேர் காயம் அடைந்தனர்.
சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து விருத்தாச்சலம் வழியே, சிதம்பரம் நோக்கி நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அரசு பேருந்து புறப்பட்டு பயணம் செய்தது. இந்த பேருந்தில் 25 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், பேருந்தின் ஓட்டுநராக திருநாவுக்கரசு என்பவர் பணியாற்றி இருந்தார். நடத்துனராக செந்தில் குமார் என்பவர் இருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் பேருந்து விருத்தாச்சலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவில் அருகே செல்கையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறிகெட்டு இயங்கி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய பேருந்து பயணிகள் அலறவே, விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மொத்தமாக 19 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.