மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அண்ணியுடன் கள்ளக்காதல்.. விடுதியில் அறையெடுத்து நடந்த சம்பவத்தில், பெண் மர்ம மரணம்.!
ஏற்காட்டில் தங்கும் விடுதியில் பெண்ணொருவர் மர்மமாக உயிரிழந்த விவகாரத்தில், காவல் துறையினர் பெண்ணின் கணவருடைய சகோதரரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய். இவரது அண்ணன் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், விஜய் தனது அண்ணனின் மனைவி மஞ்சுவோடு கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவருகிறது.
இதனிடையே, விஜய்க்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், விஜய் தனது அண்ணியுடன் நேற்று காலை ஏற்காட்டில் இருக்கும் தனியார் தங்கும் விடுதிக்கு வந்து அறையெடுத்து தங்கியுள்ளார்.
இன்று காலை நேரத்தில் மஞ்சு குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக ஏற்காடு காவல் துறையினருக்கு விஜய் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மஞ்சுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், மஞ்சு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? இருவருக்கும் இடையே தகராறு நடந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.