நீண்ட நாட்களுக்கு பிறகு 1-8ஆம் வகுப்புகள் ஆரம்பம்.! அமைச்சர் வெளியிட்ட தகவல்.!



school open in puducheri

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாடாய்படுத்தி விட்டது. 2020 ஜூலையில் தொடங்கிய முதல் அலை டிசம்பர் வரை நீடித்தநிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பின்னர் இரண்டாவது அலை தொடங்கி பொதுமக்களை பெரிதும் அச்சமூட்டியது. 

நாளுக்குநாள் அதிகப்படியான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி ஒட்டுமொத்த மாநிலத்தையும் கலங்க வைத்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் தமிழகத்தில் நவம்பர் முதல் தொடக்கப்பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் 1-8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சியவாயம் தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கையாக மதிய உணவு தற்காலிகமாக வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.