மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு.! எப்போது?? பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளிகளில் ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது.
சுட்டெரிக்கும் வெயில்
ஆனால் தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி முடிந்த நிலையிலும் வெயில் குறையவில்லை. மேலும் கடுமையான வெயிலின் காரணமாக நேற்று பீகாரில் பள்ளியில் இருந்த மாணவர்கள் அடுத்தடுத்த மயங்கி விழுந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: #Breaking: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் முக்கிய உத்தரவு..!
பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என
பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் ஜூன் 6க்கு பதிலாக ஜூன் 10 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோடை விடுமுறையில் இதெல்லாம் நடத்தக்கூடாது.. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிரடி அறிவிப்பு.!