மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவர்கள் அட்ராசிட்டிஸ்: பேருந்து கண்ணாடியை உடைத்து அமர்க்களம்!!
தற்போது பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும்போது பேருந்துகளில் தொங்கிக்கொண்டு வருவதும், துரத்திக் கொண்டு வருவதும் வழக்கமாக போய்விட்டது.
மேலும் இதனால் அவர்களுக்கு உயிர் போகும் ஆபத்து வந்தாலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை பிராட்வே செல்லும் பேருந்து ஐயப்பன் தாங்கல் செல்ல, கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவமனை அருகே சென்றது.
அப்பொழுது பேருந்தில் ராமகிருஷ்ண பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் நின்றவரே பயணம் செய்துள்ளனர். இது குறித்து பேருந்து ஓட்டுநரும், கண்டக்டரும் மாணவர்களை உள்ளே வரும்படி கூறியுள்ளனர்.
ஆனால் பள்ளி மாணவர்கள் கீழே இறங்கியதுடன் கற்களை கொண்டு பேருந்து கண்ணாடியை உடைத்து விட்டு ஓடி உள்ளனர். பின்னர் இது குறித்து ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.