மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 வருட காதல் .... பெற்றோர் எதிர்ப்பு... விபரீத முடிவு எடுத்த கல்லூரி மாணவி.!
சென்னையில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளியாகி இருக்கிறது.
சென்னை பெரம்பூர் கொல்லம் தோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கோபி இவரது மகள் ஆர்த்தி சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு பதறி துடித்த பெற்றோர் மகளின் உடம்பிலிருந்து தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு உடலில் 65 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஆர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வந்தது. காவல்துறையின் விசாரணையில் காதல் விவகாரத்தில் ஆர்த்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது.
தற்கொலை செய்து கொண்ட ஆர்த்தி, ஆகாஷ் என்ற இளைஞரை கடந்த ஐந்து வருடமாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலிக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்திருக்கிறது. மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.