திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.! சீமான் கோரிக்கை.!
தமிழகத்தில் களப்பணியாளர்களாக பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரே வீட்டிற்குள் முடங்கியிருக்கும் சூழலில், தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டிய மாபெரும் பொறுப்பு மின்வாரிய ஊழியர்களிடம் உள்ளது. மேலும், உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளை காக்க மருத்துவர்கள் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதற்கு மின்வாரிய ஊழியர்களின் சேவை முக்கியம்.
மழை, புயல் மட்டுமல்ல கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும் மகத்தான மக்கள் சேவையாற்றி வருகிறார்கள் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள். அரசு அறிவித்துள்ள கொரொனா முன்களப்பணியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய இழப்பீடு உள்ளிட்ட எவ்வித உதவிகளும் மின்வாரியத் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை.
இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணிக்காக இரவு பகல் பாராது பாடுபடும் மின்வாரியத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.