#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னையில் பரபரப்பு... 2000 போதை மாத்திரைகள் மற்றும் 1 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்... 2 இளைஞர்கள் கைது.!
சென்னையில் கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ஒன்றரைகிலோ கஞ்சா மற்றும் 2000 வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போன்றவற்றின் புழக்கம் அதிகரித்து வருவதால் இது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குரோம்பேட்டையை அடுத்த நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர்(23) என்போர் மீது ஏற்கனவே பணி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்தது தொடர்பான வழக்குகள் உள்ளது. இந்நிலையில் மீண்டும் இவர் போதைப் பொருள் விற்பனையில் இறங்கியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது நண்பர் யோவான் (32) என்பவர் போதைப் பொருட்கள் வாங்குவதற்காக ஆந்திராவிற்கு சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது நடமாட்டத்தை செல்போன் சிக்னல் மூலம் கண்காணித்த காவல்துறையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்ய முயன்றனர். காவல்துறையினர் வருவதற்கு முன்பாகவே அவர் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி விட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் யோவானை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2000 வலி நிவாரணி மாத்திரைகள் ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் சிரிஞ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும் போதை மாத்திரைகளை இவர் கொரியர் மூலம் வரவழைத்து விற்பனை செய்தாரா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கான சில ஆவணங்களும் காவல்துறை கைப்பற்றி இருக்கிறது. மேலும் இவர்கள் ஆன்லைன் மூலமும் போதை பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.