மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகமே உற்றுநோக்கும் விராலிமலை தொகுதி.! போட்டிக்கு போட்டி செண்டிமெண்ட் வாக்கு சேகரிப்பு.!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர் மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதேபோல் விராலிமலை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக இதே தொகுதியில் இரண்டு முறை வெற்றி வாய்ப்பை இழந்த தென்னலூர் பழனியப்பனும் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இரண்டு வேட்பாளர்களுமே விராலிமலை தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தி.மு.க. வேட்பாளர் தென்னலூர் எம்.பழனியப்பன் விராலிமலை தொகுதியின் பல்வேறு கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் அவரை பார்த்து சிலர் கண்ணீர் விட்டு அழுததும், பதிலுக்கு அவரும் அழுத வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் பிரச்சாரத்தின்போது, எனக்கும் சுகர் இருக்கு, பி.பி. இருக்கு, மாத்திரை சாப்பிடுகிறேன், தலை சுற்றல் வருகிறது, மயக்கம் வருகிறது, இருந்தாலும் என் மனசில் வெறி இருக்கு. எடுத்துக்கொண்ட பொறுப்பை ஒழுங்காக செய்ய வேண்டும் என்று பேசினார். இந்தநிலையில் இரண்டு வேட்பாளர்களும் மக்களிடையே செண்டிமெண்டாக பேசி வருகின்றனர். வேட்பாளர்கள் மட்டுமின்றி வேட்பாளர்களின் குடும்பத்தினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் களமிறங்கி உள்ளனர். இதனால் விராலிமலை சட்டமன்றத் தொகுதி தமிழகம் முழுவதும் உற்றுநோக்கும் தொகுதியாக காணப்படுகிறது.