திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாலியல் வன்கொடுமை.. ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்.. அதிரடி காட்டிய போலீஸ்..!
புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் வசித்து வருபவர் முருகேசன். இவருக்கு சுஜித் குமார் என்ற மகன் உள்ளார். இவர் பொக்லைன் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுஜித் குமார் அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமி தற்போது கருவுற்றுள்ளார்.
மேலும் சிறுமி கருவுற்ற செய்தி அறிந்து அதிர்ச்சடைந்த தாய் சிறுமியிடம் விசாரிக்கவே சிறுமி நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியை அழைத்துக் கொண்டு கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்ற தாய் சிறுமியின் இந்த நிலைக்கு காரணமான சுஜித் குமார் மீது புகார் அளித்தார். இதனையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுஜித் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.