மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காட்பாடி அருகே அதிர்ச்சி... 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர்... போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறை.!
காட்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாதாரம் செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
காட்பாடி அருகே உள்ள சேவூர் சத்தியபுரத்தை சேர்ந்த இளைஞர் சிவகுமார்(19), இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்திருக்கிறார்.
அப்போது சிறுமி கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனையறிந்து அந்த நபர் சிறுமியின் வீட்டிலிருந்து தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் தப்பியோடிய சிவகுமாரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். சிறுமியிடம் இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விவகாரம் அப்பகுதியில் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.