திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாஜகவில் இணையும் நடிகர் திலகம் சிவாஜியின் மகன்.?
பாஜகவில் நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
ஒருகாலத்தில், காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றியவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். ஆனால் இந்திராகாந்தி, காமராஜர் மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் கிடைக்காததால் வெளியேறி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிக் கட்சியை துவங்கினார்.
1989 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஜானகி அம்மாள் அணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். தோல்விக்குப் பின்னர் கட்சியை கலைத்துவிட்டு, விபி சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். பின்னர் நிரந்தரமாக அரசியலை விட்டு வெளியேறினார் நடிகர் சிவாஜி கணேசன்.
தற்போது சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தன் மகனுடன் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரையைச் சேர்ந்த, பாஜக நிர்வாகிகளுடன் ராம்குமார் சமீபத்தில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், ராம்குமாரும், அவரது மகனும், விரைவில், பா.ஜ-வில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.