துணை இராணுவ பாதுகாப்புடன் தேர்திருவிழா நடத்தலாமா? -  கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் பிரச்சனை விவகாரத்தில் நீதிபதிகள் காட்டம்.!



SIVAGANGA cHARIOT feSTIVAL cOURT ORDER 

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில், நவம்பர் 17ஆம் தேதி அன்று தேர் வெள்ளோட்ட நிகழ்வை நடத்த அரசுக்கு ஆணையிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

மனுவின் விசாரணையின்போது, இருதரப்பு பிரச்சனை இருப்பதால், தேர் திருவிழா நடப்பது கேள்விக்குறியாகி இருப்பதாக வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் குறித்துவைத்துக்கொண்ட நீதிபதிகள், 

"தேர் திருவிழாவை அரசு சார்பாக நடத்த இயலாத பட்சத்தில், துணை ராணுவத்தின் உதவியுடன் தேரை ஓட விடலாமா?. பல கோடி செலவு செய்து உருவாக்கப்பட்ட தேர், தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டது எதற்காக?. 

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், ஒற்றுமை என்பது நம்மிடையே ஏற்படவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. தேர் திருவிழா வெள்ளோட்டம் குறித்த அறிக்கையை, அரசு 17 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.