மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டிலிருந்த சிறுமியை தூக்கிச்சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்.. சிவகங்கையில் பயங்கரம்.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று தனியாக இருந்த சிறுமியை 5 பேர் கும்பல் தூக்கிச்சென்றுள்ளது.
காட்டுப்பகுதியில் சிறுமி ஐவர் கும்பலால் சிறுமி பலவந்தமாக கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார். இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
வீட்டிற்கு வந்த மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவரை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
மேற்படி விபரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் உள்ளூரை சேர்ந்த சூர்யா, நிஷாந்த் ஆகிய இளைஞர்களை கைது செய்தனர்.
மேலும், எஞ்சிய 3 பேர் கும்பலுக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.