மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பதிவு திருமணத்திற்கு மறுத்த கல்லூரி மாணவி சென்டரிங் கம்பியால் அடித்து கொலை; காதலன் வெறிச்செயல்..! கண்ணீரில் பெற்றோர்.!!
காதலியின் தாத்தாவை காதலன் அடிக்க, பெண்மணி கோபித்துக்கொண்டு காதலை கைவிட ஆத்திரமடைந்த காதலன் கல்லூரி மாணவி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, மாத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரின் மகள் சினேகா. இவர் அங்குள்ள அழகப்பா கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று, மாணவி சினேகா ரேஷன் கடை சந்தில் இரத்த வெள்ளத்துடன் படுகாயத்தோடு மீட்கப்பட்டார். இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் செல்வராஜுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் செல்வராஜ் மற்றும் அவரின் உறவினர்கள் விரைந்து வருவதற்குள் மாணவி பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சாக்கோட்டை காவல் துறையினர், சினேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், காதல் காரணமாக கொலை நடந்தது அம்பலமானது. அங்குள்ள புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் சென்டரிங் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரும், மாணவி சினேகாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் பதிவு திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில், கடந்த மாதம் பெண் கேட்டும் கண்ணன் தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார். ஆனால், மாணவியின் குடும்பத்தினர் படிப்பு, மற்றொரு அக்காவின் திருமணம் போன்றவற்றை மேற்கொள்காண்பித்து காத்திருக்க சொல்லியுள்ளனர்.
இதனால் கண்ணன் மாணவியை சபையில் வைத்தே பதிவு திருமணம் செய்ய அழைக்க, அதனை தட்டிக்கேட்ட சினேகாவின் தாத்தாவை கண்ணன் தாக்கியுள்ளார். இது சினேகாவின் மனதை பாதிக்க, அவர் கண்ணனிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். ஒரு மாதமாக கண்ணனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று காதலிக்கு தொடர்பு கொண்ட கண்ணன், பதிவு திருமணம் செய்ய கொடுத்து வைத்திருந்த ஆவணங்களை கேட்டுள்ளார். மாணவியும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு ரேஷன் கடை அருகே சென்ற நேரத்தில், கண்ணன் திருமணம் குறித்து வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த சினேகாவை கண்ணன் சென்டரிங் கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். மேலும், தற்கொலை செய்துகொள்கிறேன் என கண்ணன் கூறி சென்றதால், அவர் தற்கொலை செய்வாரா? என அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.