மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்ஸ்டா காதலால் காட்டுப்பகுதியில் 15 வயது சிறுமி 8 பேர் கும்பலால் சீரழிப்பு: மதுவில் போதைப்பொருள் கலந்து காதலன், நண்பர்கள் துணிகரம்.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். அவருக்கு, அதே பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நட்பாக பழகி காதல் வயப்பட்டு இருக்கின்றனர். கடந்த டிசம்பர் 01ம் தேதி சிறுமி சிறுமியை சூர்யா அழைத்து சென்ற நிலையில், 2 நாட்கள் கழித்து மயக்க நிலையில் சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார்.
பெற்றோர் மகளிடம் மகளிடம் விசாரித்தபோது, சூர்யா மற்றும் அவரது நண்பர்களான நிஷாந்த் (வயது 21), உட்பட சிலர் மதுபானம் கொடுத்து, போதையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர்.
விசாரணையைத்தொடர்ந்து சூர்யா, நிஷாந்த், கவிராஜ், ராஜ்குமார், பாலமுருகன், செல்லப்பாண்டி, வினோத் குமார், வேலு ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் காட்டுப்பகுதிக்கு சிறுமியை அழைத்துச்சென்று, மதுபானத்தில் போதைப்பொருளை கலந்துகொடுத்து இருக்கின்றனர். மயங்கிய சிறுமியை மயக்க நிலையிலேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 34 மணிநேரம் மயக்கத்தில் இருந்த சிறுமி, மயக்கம் தெளிந்து வீட்டிற்கு வந்துள்ளார் என்பது அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வருகிறது. வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.