மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகமே அதிர்ச்சி.. 13 வயது பேத்தியை சீரழித்து கர்ப்பிணியாக்கிய தாத்தா.. பதறவைக்கும் துயரம்.!
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தாத்தா போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, பட்டத்தரசி கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது 64). இவர் தனது 13 வயது பேத்தியை கடந்த 3 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், இதனை யாரிடமும் கூறக்கூடாது, அவ்வாறு கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டி வைத்துள்ளார்.
கடந்த 3 மாதமாக பாலியல் கொடுமையை அனுபவித்த சிறுமியின் உடல்நலம் பாதிக்க தொடங்கியுள்ளது. வாந்தி மற்றும் உடல்நலம் குன்றியதால், பெற்றோர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். அப்போது, சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
பேரதிர்ச்சிக்கு உள்ளாகிய பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது, தாத்தா ராசுவின் கொடூர செயல் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் ராசுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.