மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏசிக்குள் இருந்த நல்ல பாம்பு.! வயர் என நினைத்து இழுத்த முதியவர்.! அடுத்து நடந்த பகீர் சம்பவம்.!
சென்னை பள்ளிக்கரணை வாஉசி தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன்(66). இவரது வீட்டில் நேற்று ஏசியில் இருந்து இறத்துப்போன எலி விழுந்துள்ளது. இதனையாடுத்து ஸ்ரீதரன் ஏசியை சுத்தம் செய்வதற்காக ஏசிக்குள் கையை விட்டுள்ளார். அப்போது அறுத்துப்போன வயர் தொங்குவது போல தென்பட்டுள்ளது.
இதனையடுத்து மின்சார வயர் என நினைத்து அதனை இழுத்துள்ளார் ஸ்ரீதரன். அப்போது ஏசிக்குள் இருந்த கொடிய விஷம் கொண்ட நல்ல பாம்பு ஸ்ரீதரனின் கைவிரலில் கொத்தி உள்ளது. இதனையடுத்து உடனடியாக ஸ்ரீதரனின் குடும்பத்தினர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஏசியில் இருந்த பாம்பை பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஏசியில் இருந்த நல்ல பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.