#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அச்சோ.. கிச்சனில் இருந்து வந்த வினோத சத்தம்! குக்கரைத் திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கடலூரில் வீட்டில் அடுப்பறையில் அடுக்கி வைத்திருந்த குக்கரில் சுமார் 4 அடி நீளமுடைய நல்ல பாம்பு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே கம்மியம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பாரதி இளமாறன். அவரது வீட்டில் கிச்சனில் பாத்திரம் அடுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. மேலும் அதனை கவனித்த குடும்பத்தினர்கள் ஒருவேளை பாம்பாக இருக்கலாமோ என எண்ணி அப்பகுதியில் பாம்பு பிடி வீரரான செல்வா என்பவரை வரவழைத்துள்ளனர்.
உடனே அங்கு விரைந்த செல்வா கிச்சனில் சத்தம் வரும் இடத்தை நோக்கி சென்றுள்ளார். அங்கு அடுக்கி வைத்திருந்த ஒவ்வொரு பாத்திரமாக எடுத்து பார்த்துள்ளனர். அப்பொழுது வீட்டில் இருந்த குக்கரை எடுத்து பார்த்தபோது அதற்குள் நல்ல பாம்பு ஒன்று தலையை தூக்கி பார்த்துள்ளது.
இதனைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள் அஞ்சி நடுங்கியுள்ளனர். இந்த நிலையில் பாம்பு பிடிக்கும் செல்வா குக்கரில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்து, பாதுகாப்பாக கொண்டு சென்று காட்டு பகுதியில் விட்டுள்ளார். வீட்டிற்குள் வைத்திருந்த குக்கரில் பாம்பு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.