ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கணவரின் உடலைக்கூட அடக்கம் செய்ய வராத உறவினர்கள்.. கலங்கிய பெண்ணின் கண்ணீரை துடைத்த தன்னார்வலர்கள்!
மதுரையில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் உடல் நல குறைவால் இறந்த முதியவரின் உடலை தன்னார்வலர்கள் அடக்கம் செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா என்ற ஒற்றை வார்த்தையால் முடங்கி கிடக்கிறது. உறவினர்களின் துன்பங்களுக்கு கூட ஆறுதல் அளிக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இயற்கையாக இறப்பவர்களுக்கு கூட உறவினர்கள் கூடி இறுதி சடங்குகள் செய்ய முடிவதில்லை. இந்த கொடுமை தற்போது மதுரையை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு நேர்ந்துள்ளது.
கொரோனா காரணமாக மதுரை செல்லூர் பகுதியின் ஒரு சில தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உடல் நல குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இறந்தவரின் மனைவி வேண்டுகோளின்படி முதியவரின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்ல மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார். அதன்பிறகு ஆம்புலன்ஸின் மூலம் அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கொரோனா அச்சத்தால் உறவினர்கள் யாரும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை.
இதனால் இறந்தவரின் மனைவி மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இதனைப்பற்றி கேள்விப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த சில தன்னார்வலர்கள் இறந்தவரின் உடலை அருகில் இருந்த சுடுகாட்டிற்கு எடுத்து சென்று புதைத்துள்ளனர். தன்னார்வளர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.