மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு எதிரொலி: வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் ஈ.பி.எஸ் தரப்பினர் சிறப்பு வழிபாடு!, அன்னதானம்..!
அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிரான உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் ஆலயத்தில் ஈ.பி.எஸ் ஆதரவு அ.தி.மு.கவினர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தினார்கள்.
உயர் நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்கும் விதமாகவும், உச்ச நீதிமன்றத்திலும் ஈ.பி.எஸ் வெற்றி பெற வேண்டும் என வேண்டுதலை முன்வைத்து காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வழக்குகளை தீர்த்து வைக்கும் பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவிலில் ஈ.பி.எஸ் ஆதரவு அதிமுகவினர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
வழக்கறுத்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, வழக்கினை தீர்த்து வைக்க வேண்டி விளக்கேற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானத்தையும் வழங்கினார்கள்.