ராட்சத அலையில் சிக்கிய மாணவனை தேடும் போது... கடலில் தத்தளித்த மற்றொரு மாணவனின் உடல்..! அதிர்ச்சியில் போலீசார்..!!



Student dead in merina

ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவரை தேடும்போது, மற்றொரு கல்லூரி மாணவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாய்சரண் (வயது 21). இவர் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் இரவு மெரினா கடற்கரைக்கு சென்று குளித்துள்ளார். அப்போது கடற்கரையின் ராட்சத அலையில் சிக்கிய மாணவர் திடீரென மாயமானார். 

இதனைக் கண்டு பயந்துபோன நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணாசதுக்கம் காவல்துறையினர், கடலோர காவல்படை மற்றும் மெரினா மீட்புக்குழுவினர் இரவு முழுவதும் மாணவரை தேடியுள்ளனர்.

எவ்வளவு தேடியும் மாணவர் கிடைக்காத நிலையில், நேற்று காலை மீண்டும் அவரை தேடும் பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடலில் ஒரு உடல் தத்தளித்துக்கொண்டிருந்ததை கண்ட மீட்புப்படையினர் உடனடியாக ரப்பர் படகு மூலம் உடலினை மீட்டுள்ளனர்.merinaவிசாரணையில் மீட்கப்பட்ட நபர் சாய்சரண் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இறந்தது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மீட்கப்பட்டவர் அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரமசிவம் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ராட்சத அலையில் சிக்கி மாயமான சாய்சரணை தேடும்போது மற்றொரு கல்லூரி மாணவரின் உடல் கிடைத்ததால், காவல்துறையினர் குழப்பத்தில் இருக்கின்றனர். அத்துடன் மாயமான கல்லூரி மாணவர் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததால் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.