தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
'கண்ணீர் அஞ்சலி பவதாரணி' - தற்கொலைக்குறிப்பில் தனக்குத்தானே பகீர் அஞ்சலி எழுதிய மாணவி.!
11ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய பவதாரணி என்ற மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பேரதிர்ச்சி சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கமல்ராஜ். இவர் வில்லிவாக்கத்தில் டெய்லர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி தாட்சாயணி நான்கு மாதங்களுக்கு முன்னதாக உடல் நலம் குன்றி உயிரிழந்துள்ளார். மேலும், கமல்ராஜூக்கு பவதாரணி என்ற மகள் மற்றும் பவன்கல்யாண் என்ற மகனும் உள்ளனர். இருவரும் இரட்டைப்பிறவிகள் ஆவர்.
இதனைத்தொடர்ந்து 16 வயதுடைய பவதாரணி 11ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். காமல்ராஜ் டெய்லர் கடைக்கு செல்லும்போது, குழந்தைகள் இருவரும் பள்ளி முடிந்து வந்தபின் மாலை டியூஷன் செல்வது வழக்கமான ஒன்றாகும். அதேபோல் மார்ச் 31-ஆம் தேதியன்று கமல்ராஜ் வழக்கம்போல் டெய்லர் கடைக்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து, அன்று பவதாரணி தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி டியூஷனுக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்துள்ளார். இதன் காரணமாக சகோதரர் பவன்கல்யாண் மட்டும் டியூசன் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் தனிமையில் இருந்த பவதாரணி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை அறியாத தந்தையோ, வேலை முடிந்து வீடு திரும்பியதும் தனது மகளை தேடியுள்ளார். எங்கும் தென்படாததால் பவதாரணியின் படுக்கையறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்த தந்தை துடித்துப் போய் கதறி அழுதுள்ளார்.
அத்துடன் 108 மருத்துவ ஊர்திக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் பவதாரணியின் உடலை பரிசோதித்து அவர் உயிருடன் இல்லை என்று கூறியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் பவதாரணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் மாணவியின் படுக்கையறையில் சோதனை செய்யும்போது அங்கு ஒரு கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்துள்ளது. அந்த கடிதத்தில், 'நான் சாகப்போகிறேன். எல்லாம் முடிந்துவிட்டது' என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அதற்கு கீழ், 'கண்ணீர் அஞ்சலி பவதாரணி' எனவும் எழுதப்பட்டிருந்தது அப்பகுதியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.