தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு சிறப்பு முகாம் - அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவிப்பு!!



Subramanian announced Special Dengue Prevention Camp across Tamil Nadu

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அந்தந்த நகராட்சி அதிகாரிகள் முன்னெடுத்து வருகிறார்கள். 

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் எந்த அளவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது  என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே டெங்குவின் தீவிரம் அறிந்து மக்கள் முன்னெச்சரிக்கை மேற்கொள்வது அவசியமான ஒன்றாக உள்ளது.

முடிந்தவரையில் கொசுக்கள் உற்பத்தி ஆகக்கூடிய வாய்ப்பிருக்கு பகுதிகளை உடனே அப்புறப்படுத்துவது நல்லது. கொசுக்கள் உற்பத்தி ஆக காரணமான வீட்டை சுற்றிலும் இருக்க கூடிய நீர் தேக்கம் ஏற்படக்கூடிய பொருட்களை உபயோகப்படுத்தாமல் இருக்கலாம் அல்லது அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.    

M. Subramaian

வீட்டில் தண்ணீர் தொட்டியை திறந்து வைக்கக்கூடாது, தண்ணீர் தேங்கும் வகையில் எந்த பொருட்களும் பொது இடங்களில் வீசக்கூடாது என வீடு வீடாக சென்று விழிப்புணர்வை சுகாதாரத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். குழந்தைகளை கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுக வேண்டும். 

தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையாக, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 1 - ம் தேதி 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.