53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கையில் இருந்த ஒரு கயிறும் அவிழ்ந்தது. சுஜித்தை மீட்பதில் மேலும் சிக்கல்!
நாடே நாளை தீபாவளி கொண்டாட இருக்கும் நிலையில் திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்படி எனும் கிராமத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று மாலை 5.45 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் கடந்த 8 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. முதலில் மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மீட்பு கருவி மூலம் குழந்தையை மீட்கும் பணி தொடங்கியது.
முதலில் குழந்தையின் ஒருகையில் சுருக்கு சுருக்குபோடப்பட்ட நிலையில் நீண்ட நேரமாக போராடி இரண்டவது கையில் சுருக்கு போடப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலையே இரண்டாவது கையில் போடப்பட்ட சுருக்கு அவிழ்ந்ததால் மீட்பு பணி தாமதம் அடைந்தது.
இதனை அடுத்து குழந்தையின் ஒரு கையில் சுருக்கு இருக்கும் தைரியத்தில் குழந்தை இருக்கும் குழியின் அருகே பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டது. இந்நிலையில் உள்ளே இருக்கும் ஈரப்பதம் காரணமாக குழந்தையின் மற்றொரு கையில் இருந்த சுருக்கும் தற்போது அவிழ்த்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால் குழந்தையை மீட்கும் பணியில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுவருகிறது.