மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடனே இதை நிறுத்தவேண்டும்.! இல்லைனா.. பதஞ்சலி நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்.! என்ன காரணம்?
யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் மூலம் டூத் பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு ,கூந்தல் தைலம், ஆயுர்வேத மருந்துகள் என ஏராளமான அழகு மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவற்றின் விளம்பரங்களுக்காக, நவீன மருத்துவமான அலோபதியை தாக்கி கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அலோபதி சிகிச்சைக்கு எதிராக பதஞ்சலி வெளியிடும் விளம்பரத்தை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் இனி எந்தவொரு தவறான விளம்பரங்களையும் வெளியிட கூடாது. மீறினால் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டங்களை தயாரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.