மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திமுக ஆட்சிக்கு பிறகு நடக்கும் முதல் கல்விக்கொள்கை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பு.! என்ன காரணம்.?
அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் புதிய கல்விக்கொள்கை தொடர்பான ஆலோசனைக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்தக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது.
புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்த மத்தியக் கல்வி அமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறைச் செயலருக்குப் பதிலாக மாநிலக் கல்வி அமைச்சர் விவாதிப்பதே ஏற்புடையதாக இருக்கும் என்று தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு பிறகு நடக்கும் முதல் கல்விக்கொள்கை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
மேலும், மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழியை மாநில அரசுகளே தேர்வு செய்துகொள்ளலாம் என்று புதியக் கல்விக்கொள்கை கூறுகிறது. ஆனால் தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர்.