வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
சசிகலா வெளியே வந்தால் என்ன நடக்கும்.? முதலமைச்சர் பழனிசாமி ஓப்பன் டாக்.!
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 10 கோடியே 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை செலுத்தினால் அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை நேற்று முன்தினம் சசிகலா வழக்கறிஞர் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். தற்போது அபராதம் செலுத்தப்பட்டுவிட்டதால் விடுதலை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அமமுகவினர். இதனையடுத்து சசிகலா விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சசிகலா விடுதலை குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது’’ என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை முடிவு. இந்தியாவிலேயே நீட் தேர்வு வேண்டாம் என எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என தெரிவித்தார்.