சர்தார் வல்லபாய் பட்டேல் 145வது பிறந்த நாள்.! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் பதிவு.!



tamilnadu cm wishes to sarthar vallabai padel

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.  சர்தார் வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தில் உள்ள கரம்சாத் என்ற ஊரில் 1875-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி பிறந்தார். வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை அமைக்க பாடுபட்ட அவரது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவருக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். தைரியமாக வெள்ளையர்களை எதிர்த்து  சிறை சென்றவர். 1947ல் இருந்து 1950 வரை இந்தியாவின் துணைப்பிரதமராகவும், 1948-ல் இருந்து 1950 வரை உள் துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல். 

சர்தார் வல்லபாய் பட்டேலின் 145வது பிறந்த நாளைமுன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.