மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: அப்படிப்போடு.. நாளை 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.!
தமிழ்நாட்டில் நிலவி வரும் வானிலை, வடகிழக்கு பருவமழை தொடக்கத்தை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிககனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதனால் அம்மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இன்று ஒரேநாளில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி.. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சோகம்.. பருவமழை தொடங்கும் முன்னே பரிதாபம்.!
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
அதிக மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கினாலும், அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு சென்று வரும் மாணவ - மாணவியர்கள், கல்லூரிக்கு சென்று வருவோரின் பாதுகாப்பு கருதி, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!