தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி அறிவிப்பு.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் நாசமாகியுள்ளன. சமீபத்தில் ஆன்லைன் ரம்மிக்கு ஒருவர் பலியான சம்பவம் பலரையும் சோகத்துக்கு உள்ளாக்கியது.
இதனையடுத்து, இளைஞர்களின் உயிரை குடிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டுமென அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தினர். இந்தநிலையில், இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துவோரையும் அதில் ஈடுபடுவோர்களையும் குற்றவாளிகளாக கருதி அவர்களை கைது செய்யும் வகையில் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு துரிதமாக எடுக்கும். #OnlineGambling https://t.co/xSuZfEB40A
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 5, 2020
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு முடிவு செய்துள்ளது. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துவோரையும் அதில் ஈடுபடுவோர்களையும் குற்றவாளிகளாக கருதி அவர்களை கைது செய்யும் வகையில் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு துரிதமாக எடுக்கும்" என தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இந்த பதிவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.