திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழ்நாட்டில் சாப்பாடு அரிசி உணவு விலை திடீரென உயர்ந்ததற்கு காரணம் என்ன?..!
2024 மக்களவை பொதுத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் ம.க ஸ்டாலினை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அன்புமணி, "தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.16 முதல் ரூ.18 வரை உயர்ந்து இருக்கிறது. இந்த விஷயம் குறித்து நீங்கள் சிந்தனை செய்தீர்களா?. குருவை சாகுபடியில் மொத்த 4 இலட்சம் ஏக்கரில், 2 இலட்சம் ஏக்கர் நீர் நின்று கருகிப்போனது.
சம்பாவில் 10 இலட்சம் ஏக்கரில் 2 இலட்சம் ஏக்கர் கருகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ல் திறக்கப்படவேண்டிய மேட்டூர் அணை நீர் இல்லாத காரணத்தால் குருவை, சம்பா சாகுபடி பறிபோனது. இதனால் மொத்தமாக அரிசி விலை உயர்ந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு இலாபம் ஏதும் இல்லை, வியாபாரிகளுக்கு மட்டுமே பலன்" என கூறினார்.