மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் அடைப்பு! வீட்டிற்குள் முடங்கிய தமிழக மக்கள்!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும், அதில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை என கேட்டுக் கொண்டார்.
பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் திரை அரங்குகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், சிறிய, பெரிய கடைகள் ரெயில், பஸ், விமான போக்குவரத்துகள் இன்று இயங்கவில்லை.
Tamil Nadu: #JantaCurfew underway in Chennai as Coronavirus cases in the country stands at 315 pic.twitter.com/X8JrYUtESP
— ANI (@ANI) March 22, 2020
பிரதமரின் வேண்டுகோளுக்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவு தந்து யாரும் வீட்டை விட்டு வெளியேவராமல் வீட்டிற்குள்ளே முடங்கினர். அந்தவகையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு நேற்று பிற்பகலிலேயே அறிவிப்பு வெளியானதால். மதுபிரியர்கள் நேற்று இரவு டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்து பல டாஸ்மாக் கடைகளில் இரவு நேரங்களில் கூட்டம் திருவிழாவை போல காணப்பட்டது.