35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம்.! கலவரத்திற்கு காரணமானவர்களின் விபரங்களை தர டெலிகிராம் மறுப்பபு.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அங்கு நடத்திய போராட்டம் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியது.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு யார், யார் கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்பட்டார்கள் என்பதை போலீஸார் கண்காணித்து வந்தனர். இதுதொடர்பான விசாரணைக்கு வாட்ஸ்அப், முகநூல் நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
இந்தநிலையில், டெலிகிராம் குழுவில் அதிகபடியான நபர்கள் இணைந்து கலவரம் ஏற்படுத்தியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டவர்களின் விபரங்களை டெலிகிராம் நிர்வாகம் தர மறுப்பதாக மாணவி உயிரிழப்பு கலவரம் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது.