மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தென்மாவட்டத்தை அதிரவைத்த சாதிய தீண்டாமை : பெட்டிக்கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.. அதிரடி சம்பவம்.!
சங்கரன்கோவிலை அடுத்துள்ள கிராமத்தில் நடந்த சாதிய தீண்டாமையை பகுமானமாக வீடியோ எடுத்து பகிர்ந்த ஆதிக்க சாதியினர் தங்களின் தலையில் தாங்களே மண்ணைவாரி தூற்றிக்கொண்ட சம்பவத்தின் நிலையை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர் பாஞ்சாங்குளம் கிராமத்தில் வசித்து வரும் பட்டியல் சமுதாயத்தினர் - பிற சமுதாயத்தினர் இடையே திருமண விழாவில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதுகுறித்து ஒருதரப்பு மீது வன்கொடுமை வழக்கும், மற்றொரு தரப்பு மீது அடிதடி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக இருதரப்பும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதியை சேர்ந்த சுந்தரய்யா என்பவரின் மகன் மகேஸ்வரன் ஊர் நாட்டாமையாக இருந்துள்ளார். அப்போது, எதிர்தரப்பை சேர்ந்த ரூபன் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதன்பின்னர் கடைகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது என முடிவெடுத்துள்ளனர். சம்பவத்தன்று பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்க சென்ற பள்ளி மாணவர்களிடம் ஊர்க்கட்டுபாடால் பொருட்கள் தர இயலாது என மகேஸ்வரன் கூறியுள்ளார்.
சிறுவர்களும் கட்டுப்பாடா? அப்படியென்றால் என்ன என அப்பாவித்தனமாக கேட்டு செல்கின்றனர். இந்த சம்பவத்தை மகேஸ்வரனின் நண்பர் ராமச்சந்திரமூர்த்தி வீடியோ எடுத்து தங்களின் சமுதாய குழுவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
அதன்பின்னர்தான் வெளிஉலகிற்கு குறித்த சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடீயோவின் பேரில் வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர் ராமசந்திரமூர்த்தியை கைது செய்தனர். தலைமறைவான மகேஸ்வரனை தேடி வருகின்றனர். இன்று சரக ஆர்.டி.ஓ, தாசில்தார் பெட்டிக்கடைக்கு சீல் வைத்தனர்.