மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளிவாசல் அருகே இருந்த மோடியின் பேனர் கிழிப்பு : சங்கரன்கோவிலில் பதற்ற சூழல்.. பாஜகவினர் கொந்தளிப்பு..!
பிரதமரின் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டதால் பதற்ற சூழல் நிலவி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பள்ளிவாசல் தெருவில் மசூதி உள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா உலகெங்கும் உள்ள பாஜக தொண்டர்களால் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
சங்கரன்கோவில் பள்ளிவாசல் அருகேயும் பிரதமர் மோடியின் புகைப்படம் பாஜக சார்பில் வைக்கப்பட்ட நிலையில், அவை சில மாற்று மத இளைஞர்களால் கிழிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் போராட்டம் நடத்தி பேனரை கிழித்த இளைஞர்களை கைது செய்ய வைத்தனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பு வீதியில் மறியல் செய்து போராட்டம் நடத்தியது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்ற சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.