#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அரசு பேருந்து - சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. கட்டுப்பாட்டை இழந்து விபரீதம்.. 2 பேர் பலி..!
திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, எதிர்திசையில் வந்த சரக்கு ஆட்டோ மீது மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், நக்கம்பாடி முஸ்லீம் தெருவில் வசித்து வருபவர் சங்கர் (வயது 40). இவர் கும்பக்கோணம் நகரில் செயல்பட்டு வரும் தனியார் பர்னிச்சர் நிறுவனத்தின் சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை நேரத்தில் சங்கர் சரக்கு ஆட்டோவில் சோழபுரம், மேலவெளி சாலையில் சென்றுகொண்டு இருந்தார்.
சங்கருடன் மேலக்காவேரி கிராமத்தை சேர்ந்த உதவியாளர் தீரனும் (வயது 35) பயணம் செய்துள்ளார். அப்போது, எதிர்திசையில் கும்பகோணம் நோக்கி பயணித்த அரசு பேருந்து வந்துள்ளது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த அரசு பேருந்து, சரக்கு ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில், ஓட்டுநர் சங்கர் மற்றும் கிளீனர் தீரன் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருப்பனந்தாள் காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.