மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துணியை கழட்டச் சொல்லி... 15 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து... தம்பதி செய்த கொடூர செயல்.!
தர்மபுரி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
க்ஷதர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சார்ந்த தம்பதிகள் தெய்வானை மற்றும் தமிழ்ச்செல்வன். அதே பகுதியைச் சார்ந்த 15 வயது மாணவி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கும் தெய்வானைக்குமிடையே நட்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒரு நாள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை கடைக்கு போகலாம் என்று சொல்லி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் தெய்வானை.
வீட்டிலிருந்த தெய்வானையின் கணவர் தமிழ்ச்செல்வன் மாணவியை ஆடைகளை கழற்றும் படி மிரட்டி அவரை தனது செல்போன் மூலம் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். பின்னர் அந்தப் 15 வயது மாணவியை தொடர்பு கொண்ட தமிழ்ச்செல்வன் தான் கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும் இல்லை என்றால் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி இருக்கிறார். சிறுமி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியபோதும் வீட்டிலிருந்து நகைகளை எடுத்து வரச் சொல்லி மிரட்டி உள்ளார்..
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி வீட்டில் தனது பெற்றோருக்கு தெரியாமல் 5 சவரன் தங்க நகைகளை திருடி தமிழ்ச்செல்வன் மற்றும் தெய்வானை தம்பதியிடம் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் வீட்டிலிருந்த தங்க நகை காணாமல் போனதை அறிந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தது தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் விவரித்துள்ளார் அந்த சிறுமி. இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது தொடர்பாக அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பெயரில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் அந்த சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து தமிழ்ச்செல்வன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி தெய்வானை ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.