மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவரின் குடிப்பழக்கத்தால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்... கணவர் கைது... நிற்கதியான குழந்தைகள்.!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மதுவிற்கு அடிமையான கணவரின் கொடுமை தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தெற்குப்பட்டியைச் சேர்ந்தவர் ஐயப்பன்(43) இவரது மனைவி சுசிலா(39). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது இந்த தம்பதியினருக்கு சுகிலன் என்ற மகனும் தன்யா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். ஐயப்பன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது.
அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு மது அருந்தி விட்டு வந்த ஐயப்பன் மனைவியிடம் தகராறு செய்து அவரை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மணமுடைந்த அவரது மனைவி சுசிலா வீட்டு உத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் ஐயப்பன் எழுந்து பார்த்தபோது சுசிலா உத்தரத்தில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த சுசிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுசீலாவின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் ஐயப்பனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தந்தையையும் காவல்துறை கைது செய்திருப்பதால் அவர்களது இரண்டு குழந்தைகளும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். கணவரின் மதுப்பழக்கத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.