மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜாக்கிரதையால் நேர்ந்த துயரம்: மனைவியை பறிகொடுத்த கணவர் கதறல்..!
சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிளியனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மச்சகேந்திரன். இவரது மனைவி வாசுகி (40). இவர் நேற்று காலை 7 மணியளவில் தனது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகைக்கு சென்றார். அப்போது, நேற்று முன்தினம் இரவில் காற்றுடன் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள தென்னை மரத்தின் மட்டை ஒன்று, மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் மின்சார வயர் மீது விழுந்ததினால், அந்த மின்சார வயர் அறுந்து கீழே விழுந்து கிடந்தது.
இதனை கவனிக்காத வாசுகி, எதிர்பாராதவிதமாக அந்த மின்சார வயரை மிதித்துள்ளார். இதனால் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தோர், வாசுகியை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி உயிரிழந்ததை அறிந்த மச்சகேந்திரன் கதறி அழுதது பார்ப்பவர்களை கலங்க செய்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஒரத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து , வாசுகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.