#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அரை இருட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை எடுத்த விவசாயி: சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலி..!
திருப்பத்தூர் மாவட்டம், சின்ன பசலிகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரகவுண்டர். இவரது மகன் சின்னகண்ணு (55). இவர் ஒரு விவசாயி. நேற்று திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசியதுடன் லேசான மழை பெய்தது. அப்போது அந்தப் பகுதியில் உள்ளதடத்தின் வழியாக சென்ற உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழுந்த சின்னகண்ணு, வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அங்கே மின்சார கம்பி கீழே கிடப்பதை கவனிக்காமல் ஏதோ ஒயர் அறுந்துள்ளதாக நினைத்து கையால் தூக்கிய போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.
சின்னகண்ணுவின் அளறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளோர் வெளியே வந்து பார்த்தபோது மின்சாரம் தாக்கி அவர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து மின்வாரியத்தினருக்கும், தாலுகா காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அவரது மகன் விக்ரம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருப்பத்தூர் காவல்துறையினர், அவரது சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.