ஹெலிகாப்டர் விபத்து நடந்ததற்கான காரணம் என்ன.? கருப்பு பெட்டி எங்கே.? தீவிர தேடுதல் பணி.!



The intensity of the task of looking for the black box

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெல்லிங்ஸ்டன் இராணுவ பயிற்சிப்பள்ளிக்கு, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 9 இராணுவ உயர் அதிகாரிகள் நேற்று செல்லவிருந்தனர். காலை 10.30 மணியளவில் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்ற நிலையில், வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் திரும்பி அனுப்பப்பட்டது. 

வரும் வழியில் ஏற்பட்ட விபத்தில், இராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியானார். இந்த விபத்தில் ராவத்தின் மனைவி உள்பட மேலும் 13 பேர் பலியானார்கள். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் சென்ற எம்.ஐ. 17வி 5 ரக ஹெலிகாப்டர் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. 

இந்தநிலையில், விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியில் விபத்துக்கு முன் கடைசி நிமிடத்தில் பைலட் பேசியது பதிவாகி இருக்கும்.மேலும் எவ்வளவு அடி உயரத்தில் பறந்தது என்பன உள்ளிட்ட விவரங்களும் பதிவாகி இருக்கும். எனவே விபத்துக்கான காரணத்தை கண்டறிய கருப்பு பெட்டி முக்கியமானது என்பதால், கருப்பு பெட்டியை தேடும் பணி நடைபெறுகிறது. இந்தநிலையில் விமானப்படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.