விவாகரத்துக்காக வந்த பெண்ணுடன் வக்கீலுக்கு கள்ளக்காதல்.! நள்ளிரவில் வந்து கதவை தட்டிய பெற்றோர்.! அடுத்து நடந்த பயங்கரம்.!



The lover that prevented the lawyer's murder is cut

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். 36 வயது நிரம்பிய இவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக  இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் சத்யா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக வழக்கு தொடர வழக்கறிஞர் வெங்கடேசன் என்பவரை நாடியுள்ளார். அப்போது, வழக்கறிஞர் வெங்கடேசனுக்கும், சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியுள்ளது. இதை அறிந்து பெற்றோர் சத்யாவை கண்டித்துள்ளனர். 

இதையறிந்த சத்யாவின் பெற்றோர், வக்கீலுடனான கள்ளக்காதலை கைவிடும்படி அவரை கண்டித்தனர். ஆனால் அதற்கு மறுத்து சத்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக தங்கியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சத்யாவை சந்திக்க அவரது வீட்டுக்கு வக்கீல் வெங்கடேசன் வந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் சத்யாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சத்யாவின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினர். அப்போது சத்யா கதவை திறந்ததும் வீட்டுக்குள் கள்ளக்காதலன் வெங்கடேசன் இருப்பதை கண்டதும் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் தயாராக கொண்டு வந்த கத்தியால் வழக்கறிஞர் வெங்கடேசனை வெட்டியுள்ளனர்.

Murderஇதில், பலத்த வெட்டுக்காயமடைந்த வழக்கறிஞர் வெங்கடேசன், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதனை தடுக்க முயன்ற சத்யாவையும் வெட்டியுள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனால் இருவரும் இறந்துவிட்டதாக கருதி சத்யாவின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேரும் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மயக்கம் தெளிந்து எழுந்த சத்யா, அலறல் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்,போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சத்யாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரவாயல் பகுதியில் பதுங்கியிருந்த சத்யாவின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.