மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வாழ்ந்தால் உன்னோடு.. இல்லையேல் மண்ணோடு".. கள்ளக்காதலிக்காக போலீஸை எதிர்த்து நடுரோட்டில் கதகளியாடிய இளைஞர்..!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், புதுப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ரசுல். இவரது மனைவி ஹாய்ஸ்லா பானு. தம்பதிகளுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில், மூன்று ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இதற்கிடையில் வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கள்ளக்காதல் ஏற்பட்ட ரசூல் மனைவியின் எச்சரிக்கை மீறி செயல்பட்டு வந்தார். இதனால் அரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பானு கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் ரசூலை விசாரிக்க காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில், கள்ளக்காதலை கைவிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த ரசூல் நான் வாழ்ந்தால் அவருடன் தான் வாழ்வேன்.
இல்லையேல் செத்துவிடுவேன் என்று கூறி காவல்நிலையத்திலிருந்து ஓடி சாலைக்குச்சென்று அவ்வழியே வந்த அரசு பேருந்து, கார் ஆகியவற்றை மறித்து தன்மீது ஏற்றி கொலை செய்யுமாறு அடாவடி செய்துள்ளார்.
நல்ல வேலையாக அரசுபேருந்து ஓட்டுனர் சுதாரித்து வாகனத்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் சாலையில் நின்று வம்புசெய்த நபரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து மீண்டும் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.